
ஒரு பிளஸ் பதினைந்தும்
ஒரு மைனஸ் பதினைந்தும்
ஆழமான அகழிகளாய்
உயரமான கற்சுவராய்
சிறையிருப்பதே சந்தோசமாய் உனக்கு
நட்பின் மிகுதியாலுனை ஒருமையில்
விளித்த போதுன் வார்த்தைகள்
என்னை பலகாததூரம் தள்ளிவிட்டன
சுடுநெருப்பாய். ஆண்களின் அடுத்த
நகர்வென உனதொரு ஆய்வுக்குழந்தை சொன்னது ...